உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே.........
உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே.....
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே.....
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே......... ( உயிரும் )
விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான்...................
சாமி தவித்தான்
தாயை படைத்தான்.. (உயிரும் )
https://www.youtube.com/watch?v=poAZrz69iZ0
No comments:
Post a Comment