Friday, January 14, 2011

தை மாதம் தமிழ்ப் புத்தாண்டு

தமிழனின் தொழில் விவசாயம், தமிழனின் வாழ்வு இயற்கையை சார்ந்தது. பருவ காலங்கள் மனிதனை ஆண்டு வந்ததால் வருடத்தை 'ஆண்டு' என்று பெயரிட்டான்.

தமிழன் ஆண்டை ஆறு பருவ காலமாகப் பிரித்தான்
தை, மாசி - இளவேனில் காலம்,
பங்குனி, சித்திரை - முதுவேனில் காலம்,
வைகாசி, ஆனி - கார் காலம்,
ஆடி, ஆவணி - கூதிர் காலம்,
புரட்டாசி, அய்ப்பசி - முன்பனி காலம்,
கார்த்திகை, மார்கழி - பின் பனி காலம்.

தமிழன் தன் வாழ்வை இளவேனில் காலத்தில் தான் தொடங்கினான், அதனால் தை முதல் நாளைத் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்.

ஆண்டு, பருவம், மாதம், நாள், கிழமை, இரவு, பகல் எல்லாமே சூரியன் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகின்றன. ஆண்டில் இரண்டே நாட்களில்தான் சூரியன் சரியாக நேர் கிழக்கே உதிக்கிறது. மற்ற எல்லா காலத்திலும், ஒன்று தெற்கே தள்ளி உதிக்கிறது அல்லது வடக்கே தள்ளி உதிக்கிறது. ஜூன் 20ம் தேதியில் சூரியன் கிழக்கு திசையில் மிகவும் வடக்கே தள்ளி உதிப்பதை காண்பீர்கள். பிறகு சூரியன் தெற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 21ம் தேதியன்று தெற்கே மிகவும் தள்ளி உதிக்கும். சூரியன் இவ்விதம் வடக்கிலிருந்து தெற்கே செல்ல ஆறு மாத காலம் பிடிக்கும். தெற்கே சென்ற சூரியன் வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கும். ஆறு மாத காலம் கழித்து மறுபடி ஜூன் 20ம் தேதி இருந்த இடத்துக்கு வந்து சேரும். மார்கழிக்கு பிறகு (டிசம்பர்) சூரியன் வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கும்போது குளிர் குறைய ஆரம்பிக்கிறது. பகல் நேரம் அதிகரிக்கிறது.! இவை எல்லாம் வரவேற்கத்தக்க அம்சங்கள் என்பதால் சூரியன் வடக்கு நோக்கி நகருவதை தமிழர்கள் பொங்கல் என்று கொண்டாடுகின்றனர்.



No comments:

Post a Comment

Followers