Saturday, March 6, 2010

தாலாட்டும் காற்றே வா - கேட்டவுடன் பிடித்தது





தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா
தொலைதூர நிலவே வா தொட வேண்டும் வானே வா
உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திருமேனி சேராமல் என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகி போவேனோ
என் உயிரே நீதானோ என் உயிரே நீதானோ…
கண்ணுக்குள் கண் வைத்து,கண் இமையால் கண் தடவி,
சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ
பேச்சிழந்த வேளையிலே,பெண்ணழகு என் மார்பில்
மூச்சு விடும் வாசனையை நுகராமல் போவேனோ
உன் கட்டுக்கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ?
அதில் கள்ளத்தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ

நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் அதை உனக்கு ஒலிபரப்ப மாட்டேனோ


ஒரு நாள் ஒரு பொழுது,உன் மடியில் நான் இருந்து,

திருநாள் காணாமல் செத்தொழிந்து போவேனோ
தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரம் ஏறி,
இலையெல்லாம் உன் பெயரை எழுதாமல் போவேனோ
உன் பாதம் தாங்கி நெஞ்சில் பதியாமல் போவேனோ,
உன் பன்னீர் எச்சில் ருசியை அறியாமல் போவேனோ
உன் உடலை உயிர் விட்டு போனாலும்,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ

உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி
நீ வாழும் வரை நானும் வாழேனோ

என் உரிமை நீதானோ என் உரிமை நீதானோ…


படம்: பூவெல்லாம் உன் வாசம்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
இசை: வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து

Thursday, February 18, 2010

சுட்டும் விழிச் சுடரே - கேட்டவுடன் பிடித்தது








ஆண்:

சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்

பெண்:

தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்

ஆண்:

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன் உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்

பெண்:

சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றி கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

மரங்கொத்திப் பறவை ஒன்று
மனம் கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர் வரை தந்தேன்

ஆண்:

தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்

பெண்:

மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு கண்ணா நீ
கோபப்பட்டால் வெயில் அழகு கண்ணா நீ
கோபப்பட்டால் வெயில் அழகு

ஆண்:

சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே

பெண்:

உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

திரைப்படம்: கஜினி
வெளிவந்த வருடம்: 2005
இயற்றியவர்: கவிஞர் நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: பாம்பே ஜெயச்ரி, ச்ரிராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

Followers